(Computer Ports)
கணனியுடன் பிற பாகங்களை இணைப்பதற்கான தொடுப்புகள் குதைகள் எனப்படும்.
1. மின்வலு இணைப்புக் குதை (Power Supply
Port)
கணனியுடன் மின் இணைப்பை ஏற்படுத்த பயன்படும்.
2. Ps2 குதைகள் (Ps2 Ports)
இவை விசைப்பலகை, சுட்டி என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது. விசைப்பலகையை தொடுக்க ஊதா நிறமும், பச்சை நிறம் சுட்டியை தொடுக்கவும் பயன்படுத்தப்படும். தற்காலத்தில் ps2 port களுக்கு பதிலாக USB குதைகள் பயன்படுத்தப்படுகின்றன
3. USB குதைகள் (USB – Universal
Serial Bus)
இவை அச்சுயந்திரம்,வருடி விசைப்பலகை, சுட்டி என்பவற்றை கணனியுடன் இணைக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குதையின் மூலம் பிற துணையுறுப்புக்களை தொடுத்தவுடன் பயன்படுத்த முடிவதால் Plug & Play யென அழைக்கப்படுகிறது. இதன் மூலம் 127 துணையுறுப்புக்களை தொடுக்கலாம்.
4. தொடர் குதை (Serial
Port /COM port/ Communication Port)
இவை serial
mouse, modemஎன்பவற்றை இணைக்க பயன்படுத்தப்படும். Pin 9, Pin
25 என இருவகைகள் மேல் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. முனைப்பகுதிகள் கொண்டுள்ள குதைகள் MALE உற்புற அமைப்பை கொண்டவை FEMALE எனவும் அழைக்கப்படும்.
5. சமாந்திரக்குதை (Parallel
Port)
இது அச்சுயந்திரத்தை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.
6. VGA குதை (Video
Graphic Array Port)
இவை Monitor,
Projector என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.
7. ஒலி விளையாட்டு துணையுறுப்புக்குதைகள் (Sound
and Game Ports)
இவை ஒலி விளையாட்டு துணையுறுப்புகளை இணைக்க பயன்படும். Joystick,
Speakers, Microphone, external sound devices and Etc
8. வலையமைப்பு குதை (Network
Port)
கணனியை இணையத்துடன் தொடுப்பதற்கு வலையமைப்பு குதை உதவுகிறது.
0 Comments